ஸ்ரீநகரில் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
"பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. பனிப்பொழிவால் வாகனங்கள் சாலையில் பயணிக்க முடியவில்லை” என உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
பனியால் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தங்குமிடங்களை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில நாட்களுக்கு விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.