20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்கவும்: இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் கோரிக்கை
முன்னுரிமை அடிப்படையில் இந்தியா 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் இந்தியா 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இந்தியாவில் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்துவிட்டு, முன்னுரிமை அடிப்படையில் இந்தியா பிரேசிலுக்கு 20 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளை விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.