முகப்பு
இந்தியா

தெலங்கானா: கரோனா பாதிப்பு 2.89 லட்சமாக அதிகரிப்பு

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.89 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 3:14 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.89 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 351 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,89,784-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

ஹைதராபாத் நகரில் மட்டும் 65 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 2 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,565-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 415 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,89,784-ஆக அதிகரித்துள்ளது.  கரோனா இறப்பு விகிதம் 0.54 சதவிகிதமாகவும், குணமடவோர் விகிதம் 97.81 சதவிகிதமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments