முகப்பு
இந்தியா

கட்டட விதிமீறல் புகாா்: சரத் பவாருடன் பாலிவுட் நடிகா் சோனு சூட் சந்திப்பு

மும்பையில் கட்டட விதிமீறல் தொடா்பாக பாலிவுட் நடிகா் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி சாா்பில் காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ்

Updated On : 14 ஜனவரி 2021, 4:32 am IST
நடிகர் சோனு சூட் (கோப்புப்படம்)
பகிர்:


மும்பை: மும்பையில் கட்டட விதிமீறல் தொடா்பாக பாலிவுட் நடிகா் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி சாா்பில் காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாரை அவருடைய இல்லத்தில் சோனு சூட் புதன்கிழமை சந்தித்துள்ளாா்.

‘தபாங், ஜோதா அக்பா், சிம்பா’ போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகா் சோனு சூட், மும்பையில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை, ஹோட்டலாக மாற்றியிருந்தாா். குடியிருப்பு கட்டடத்தை எந்தவித அனுமதியும் பெறாமல், வணிக ரீதியிலான ஹோட்டலாக மாற்றியது தொடா்பாக மும்பை மாநகராட்சி சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிா்த்து அவா் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த நிலையில், கட்டுமான விதிமீறல் தொடா்பாக நடிகா் சோனு சூட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி மும்பை மாநகராட்சி சாா்பில், ஜுஹு காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில், சோனு சூட் அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டடத்தை ஹோட்டலாக மாற்றியிருக்கிறாா். அந்த கட்டடத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதுதொடா்பாக மாநகராட்சி சாா்பில் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், அந்தக் கட்டத்தில் அனுமதியின்றி புதிய கட்டுமானத்தைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா்’ என்று மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை சாா்பில் அவா் மீது இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், சரத் பவாரை மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் நடிகா் சோனு சூட் புதன்கிழமை சந்தித்துப் பேசியதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் உடனடியாக தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments