தலைமைச் செயலகம் வந்த பிறந்தநாள் கேக்! வெட்ட மறுத்த விஜய்! - காரணம் என்ன?
பிறந்தநாளையொட்டி தலைமைச் செயலகத்திற்கு வந்த கேக்கை முதல்வர் விஜய் வெட்ட மறுத்து திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து...
பிறந்தநாளையொட்டி தலைமைச் செயலகத்திற்கு வந்த கேக்கை முதல்வர் சி. ஜோசப் விஜய் வெட்ட மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார்.
கேக்கை உள்ளே கொண்டு சென்ற புகைப்படமும், வெட்டாமல் விஜய் திருப்பி அனுப்பிய புகைப்படமும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி முதல்வராகி முதல்முறை பிறந்தநாள் வந்துள்ளபோதும், தலைமைச் செயலத்தில் வைத்து வெட்டாமல் திருப்பி அனுப்பியதற்கான காரணமும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்று முதல்முறை இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நடிகராகப் பல பிறந்தநாள்களைக் கொண்டாடியிருந்தாலும், முதல்வரான பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தவெக தொண்டர்கள் மக்களுக்கு அன்னதானம், ரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு நேரில் வாழ்த்து கூற இன்று காலை குவிந்திருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பிரமாண்டமான சிவப்பு நிற கேக் ஒன்று சட்டப்பேரவைக்குள் கொண்டு செல்லப்பட்டது.
அனைவரும் கேக் வெட்டும் கொண்டாட்டத்திற்காகக் காத்திருந்த நிலையில், அந்த கேக்கை வெட்ட முதல்வர் விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் கேக் வெட்டி கொண்டாட முதல்வர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதுமட்டுமின்றி கொண்டுசெல்லப்பட்ட கேக்கில் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று இருந்ததாலும், தமிழ்நாடு படம் பொறிக்கப்பட்டிருந்ததாலும் வெட்ட மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
TN CM joseph Vijay refused to cut birthday cake in assembly what was reason
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.