கனிமங்கள் ஏற்ற வந்த கேரள லாரிகள் திருப்பி அனுப்பிவைப்பு
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்த நிலையில், கேரளத்திலிருந்து வந்த லாரிகள் புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன.
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்த நிலையில், கேரளத்திலிருந்து வந்த லாரிகள் புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன.
தேனி மாவட்டம், போடி பகுதியிலிருந்து தினசரி பல லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்-சாண்ட், மணல் ஆகியவற்றை வரும் 3 மாதங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்தது.
இதையடுத்து, கேரளத்திலிருந்து போடிக்கு வந்து மணல், ஜல்லி, கற்கள் ஏற்றி தயாராக இருந்த லாரிகள் கேரளத்துக்கு கொண்டு முடியாமல் குவாரிகளிலேயே கொட்டப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், காலியான லாரிகள் மட்டும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, கேரளத்திலிருந்து வந்த லாரிகளும் சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.