த்ரிஷா வீட்டில் மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டம்! அதே நீலக்கண்! யாருக்கு?
த்ரிஷா வீட்டில் மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் அதே நீலக்கண் எமோஜியுடன் பகிரப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, நடிகை த்ரிஷாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.
நடிகை த்ரிஷாவின் த்ரிஷாவின் பாட்டிக்கு இன்று 98வது பிறந்தநாளாம். இதனை மகள் மற்றும் பேத்திகளுடன் அவர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் 98 என்று பதிவிட்டு அதற்கு முன்பும் பின்பும் திருஷ்டி அண்டாமல் இருக்கப் பயன்படுத்தும் நீலக் கண் எமோஜியையும் த்ரிஷா பதிவிட்டு, தன்னுடைய தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.
Advertisement
Advertisement
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட கேக் முன்னிலையில் பாட்டி அமர்ந்திருக்க, அவருடன் த்ரிஷாவின் அம்மா உமாவும் இருக்கிறார். அவர்களது வளர்ப்பு நாய்க்குட்டியும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
த்ரிஷா அண்மையில்தான் தன்னுடைய அம்மா உமாவின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி, என்ன த்ரிஷா அம்மாவுக்கு 70 வயதா? பார்த்தால் தெரியவேயில்லையே என்று பலரும் வியப்பைப் பதிவு செய்திருந்தனர். இன்று உமாவின் தாயாராருக்கு 98வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஜூன் 22ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களையும் த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பரபரப்பைக் கூட்டியிருந்தார்.
அன்று அவரது பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை விட, அதில் இடம்பெற்றிருந்த கேக்குகளுக்கு புதிய செல்வாக்குக் கிடைத்தது. டிராமிசு, மாம்பழ வென்னிலா கேக்குகள் எல்லாம் சிஎம் கேக் என்று அடையாளம் மாறியது.
Another birthday celebration at Trisha's home! That same blue-eyed look! For whom?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.