த்ரில்லர் இணையத் தொடரில் நடிக்கும் த்ரிஷா?
த்ரில்லர் இணையத் தொடரில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக வெளியாகும் தகவல் பற்றி...
மா இன்டி பங்காரம் திரைப்படம் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் இணையத் தொடரில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து, இந்தாண்டு நடிகர் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இந்தாண்டு இறுதியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, த்ரிஷா நடித்த தெலுங்கு படமான விஸ்வம்பரா படமும் வெளியாகக் காத்திருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த மூன்று மாதங்களாக புதிய திரைப்படங்களில் த்ரிஷா ஒப்பந்தமாவதை தவிர்த்து வந்ததால், அவர் சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இன்டி பங்காரம் திரைப்படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டியின் புதிய இணையத் தொடரில் த்ரிஷா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதையில் நடிக்க த்ரிஷா ஒப்புக்கொண்டிருப்பதாகவும் வருகின்ற நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2018-ல் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதையில், ஆர். மாதேஷ் இயக்கிய மோகினி திரைப்படத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.
Trisha to star in a thriller web series!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.