FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

த்ரிஷாவின் புதிய திரைப்படம்! லண்டனில் தொடங்கிய படப்பிடிப்பு!

நடிகை த்ரிஷாவின் புதிய திரைப்படம் குறித்து....

2 செப்டம்பர் 2026, 2:38 pm IST
பகிர்:

நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’தங்க மகன்’, ’தெறி’ உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் ‘சூரரைப் போற்று’, ’மகேஷிண்டே பிரதிகாரம்’, ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை அபர்ணா பாலமுரளி பதிவு செய்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் திரைப்படமென்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Filming for the new movie starring actress Trisha as the lead has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments