FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் முடிவு! த்ரிஷாவின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமா?

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக வரும் தகவல்கள் த்ரிஷாவின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமா என்ற சந்தேகம் பற்றி..

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:45 pm IST
த்ரிஷா.
பகிர்:

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அதிக யூகங்கள் வெளியானவர்களின் பட்டியலில் நடிகை த்ரிஷா முன்னணியில் இருப்பார்.

அதுபோலவே, தற்போதும் ஒரு யூகம் வெளியாகியிருக்கிறது. அதுதான் த்ரிஷா சினிமாவிலிருந்து ஓய்வு என்பது. இது, ஏற்கனவே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்திக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

தற்போது நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, தற்காலிகமாக சினிமாவிலிருந்து ஓய்வெடுக்க நடிகை த்ரிஷா முடிவெடுத்திருப்பதாக சில தகவல்கள் வெளியான நிலையில், அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை உறுதி செய்வதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அண்மைக் காலங்களில் த்ரிஷா நல்ல கதாபாத்திரங்கள் அல்லது பேசும்படியான கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்து குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். 2025ஆம் ஆண்டு தக் லைஃப் உள்பட நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு, சூர்யாவுடன் கருப்பு வெளியாகிவிட்டது. அடுத்து இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகலாம்.

தற்போது வரை அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு புதிதாக எந்த திரைப்படத்திலும் நடிக்க த்ரிஷா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், நடிகை த்ரிஷா சினிமா துறையிலிருந்து தற்காலிகமாக சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டாலும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சொல்வது அவர் நடிப்பிலிருந்துதான் ஓய்வெடுக்கப் போகிறார், ஆனால் தயாரிப்பில் இறங்கும் ஆர்வம் இருப்பதால், அவர் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கலாம் என்றும் சலசலக்கப்படுகிறது.

ஆனால், அதெல்லாம் இல்லை, அவர் அரசியலில் இறங்கப் போகிறார், தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்றால், அவர் ஒரு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவார் என்றும், ஏற்கனவே, அரசியலில் நுழையப் போகிறார் த்ரிஷா என்று வந்த வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாகவே, சினிமா ஓய்வு தகவல் பரவி வருவதாகவும் சிலர் முனுமுனுக்கிறார்கள்.

உண்மை என்ன? சினிமாவிலிருந்தே ஓய்வா, தயாரிப்புத் துறைக்கு சென்று, இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை த்ரிஷா, தயாரிப்புத் துறையிலும் புதிய சாதனைகள் படைப்பாரா? இல்லை தமிழக மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைவாரா? என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

summary

The decision to take a break from cinema! Is this a prelude to Trisha's entry into politics?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments