அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?
நடிகை த்ரிஷா கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி சாரதா கோயிலுக்குச் சென்றிருந்தது பற்றி...

பல்வேறு காரணங்களால் அவ்வப்போது செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் நடிகை த்ரிஷாவின் பெயர் இடம்பெறும். இந்த முறை, அவரது பெயர் இடம்பெற்றிருப்பது கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் கோயிலுக்குச் சென்றது பற்றியதாக அமைந்துள்ளது.
கர்நாடகத்தில் அமைந்துளள் சிருங்கேரி கோயில், காசி தலத்துக்கு நிகரானது. பல சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில், நடிகை த்ரிஷா சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.
ஏற்கனவே அவரது பெயரில், இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை, திருநெல்வேலியில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் கர்நாடகத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
ஆனால், திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கும் த்ரிஷா, கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சிருங்கேரி சாரதா பீடத்திற்கு சென்றிருந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அதில், சிருங்கேரி சாரதா பீடத்தின் பிரமாண்டமான ராஜகோபுரத்திற்கு முன்னால் த்ரிஷா நின்றுகொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு அவர் "DIVINE" (தெய்வீகம்) என்று தலைப்பிட்டு, அனிருத் லோகநாத் இசையமைத்த இசையையும் இணைத்திருந்தார்.
ஏற்கனவே, அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்று ஆறு மாதங்களாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அண்மையில் நெல்லையில் த்ரிஷா பேரவை தொடங்கப்பட்டிருக்கும்போது, திடீரென கர்நாடகத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனினும், அரசியல் நுழைவுக்கும், கர்நாடக கோயிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே கூறப்படுகிறது.