முதல்முறையாக ரூ. 200 கோடி வசூலித்த ரவிதேஜா!

ரூ. 200 கோடி வசூலித்த இருமுடி திரைப்படம்...

Published On :

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான இருமுடி திரைப்படம் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது.

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் இருமுடி கட்டு. வன்முறை வாழ்க்கை வாழ்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மகளின் விருப்பத்தின் பேரில் ஐயப்பனுக்கு மாலை போடுவதும், அதனால் அவரது வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களுமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் குழந்தை நட்சத்திரம் நக்‌ஷத்ரா மகளாகவும் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான பாடல்களும் பெரிய ஹிட் நடித்ததால் இப்படத்திற்கு வரவேற்பும் அதிகம் கிடைத்தது.

Story image

திரைக்கு வந்த நாளிலிருந்து இருமுடி நல்ல வசூலைப் பெற்றதுடன் குடும்ப ரசிகர்களையும் அதிகம் ஈர்த்தது. இந்த நிலையில், இப்படம் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, நடிகர் ரவி தேஜாவின் முதல் ரூ. 200 கோடி படமாக அமைந்துள்ளதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

The movie irumudi, starring actor Ravi Teja, has grossed ₹200 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.