FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லண்டன் சாலைகளில் த்ரிஷா! விடியோ வெளியிட்ட ரசிகர்! தவெக தொண்டர்களின் மைன்ட் வாய்ஸ் என்ன?

லண்டன் சாலைகளில் த்ரிஷா இருக்கும் விடியோவை வெளியிட்ட ரசிகர்கள்

1 செப்டம்பர் 2026, 11:49 am IST
பகிர்:

லண்டனின் சைனாடவுன் சாலைகளில் தன்னுடைய விடுமுறை நாள்களை மகிழ்ச்சியோடு செலவிட்டுவரும் நடிகை த்ரிஷாவின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லண்டனில் இருக்கும் தமிழர்கள் சிலர், அவர் த்ரிஷா போல இருக்கிறதே என்று சந்தேகித்து நெருங்கிச் சென்று பார்த்து உண்மையிலேயே த்ரிஷாதான் என்று விடியோக்களை எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

லண்டனில் உள்ள உணவகங்களில் தன்னுடைய தோழிகளுடன் உணவருந்தியபடியே பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புகள் இல்லாமல் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் மிக மகிழ்ச்சியாக லண்டனின் பல முக்கிய இடங்களுக்கும் சென்று வருகிறார்.

Advertisement

Advertisement

சாதாரணமாக பிளாக் ஜம்பர், நீல ஜீன்ஸ் அணிந்துகொண்டு, எந்த நெருக்கடியும் இல்லாமல் ரசிர்களின் தொல்லை இன்றி, நிம்மதியாக பொழுது செலவிடும் விடியோக்களை அவரது ரசிகர்கள் விரும்பி பகிர்ந்து வருகறிர்கள.

மேலும், தாங்கள் லண்டனில் கடைக்குச் சென்றபோது அங்கே இவரைச் சந்திப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று பலரும் த்ரிஷாவின் விடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதனைப் பார்க்கும் தவெக தொண்டர்களோ, அவர் லண்டனில் நிம்மதியாக இருக்கட்டும், அவரது தனியுரிமையில் ரசிசர்கள் தலையிட வேண்டாம், எப்போதும் சினிமா, படப்பிடிப்பு என பிசியாக இருக்கும் நடிகை, நிம்மதியாக தனது விடுமுறையை கொண்டாடட்டும். அவரை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

summary

Trisha on the streets of London! Fans release a video! What are TVK cadres thinking?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments