FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் விஜய்யைப் பற்றி...

17 செப்டம்பர் 2026, 9:04 am IST
முதல்வர் விஜய்.
பகிர்:

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர் விஜய், வியாழக்கிழமை காலை சென்னை திரும்பினார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியல் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள முதல்வர் விஜய், அதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப். 10 ஆம் தேதி முதல்முறையாக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளா​விய திறன் மையங்​கள், ஆய்வு மேம்பாட்டு வசதி​களை நிறு​வுவதற்​காக, அரசின் வழி​காட்டி நிறுவனத்துடன் பல்​வேறு சர்வதேச நிறு​வனங்​கள் ரூ. 15,300 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

Advertisement

Advertisement

அதிகபட்சமாக, சம்​வர்​தனா மதர்​சன் இன்​டர்​நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது பிரிட்டன் மற்​றும் ஐரோப்​பா கூட்டு நிறுவனங்களு​டன் இணைந்து தமிழ்நாட்டில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்​ளது. 

இதுதவிர, ஏர்ன்​ஸ்ட் - யங் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்​னாலஜி, பிரிட்டனைச் சேர்ந்த வில்​சன் பவர் சொல்​யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த தொழில் முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு முறை பயணமாக லண்டன் சென்றிருந்த முதல்வர் விஜய் 7 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப். 17) காலை சென்னை திரும்பினார். 

summary

Chief Minister Vijay, who had gone to London to attract industrial investments, returned to Chennai on Thursday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments