FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேஷ்டி-சட்டையில் வரும் முதல்வர் விஜய்! காரணம் என்ன?

வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேஷ்டி-சட்டையில் தலைமைச் செயலகம் வருகிறாரா முதல்வர் ஜோசப் விஜய் என்பது பற்றி..

Updated On : 31 ஜூலை 2026, 3:24 pm IST
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டையில் தலைமைச் செயலகம் வருவது தனிக்கவனம் பெற்றுள்ளது.

பெரும்பாலும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் என்று சொல்ல முடியாது, ஆனால், வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி - சட்டையில் வந்துகொண்டிருக்கிறார். இன்றும் அப்படியே.

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் கோட் சூட்டில் வந்து அசத்தினார். ஆனால், அதற்கு நேர்மாறாக, தற்போது சில வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகம் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement

பொதுவாக முதல்வர் பதவியில் இருப்பவர்களின் பேச்சு, செயல்பாடுகள், திட்டங்கள் பற்றி மக்கள் அதிகம் பேசுவார்கள். ஆனால், ஒரு திரை நட்சத்திரமாக பலராலும் கொண்டாடப்பட்ட கதாநாயகனாக இருந்த விஜய், முதல்வராகி இருப்பதாலோ என்னவோ, அவரது ஆடைகளும் தனிக் கவனம் பெறுகின்றன.

மே 10ஆம் தேதி கருப்பு நிற கோட் சூட்டில் வந்த போதே, அந்த கோட் எங்கு தைக்கப்பட்டது, எப்போது ஆர்டர் கொடுக்கப்பட்டது என்று அலசப்பட்டது. அதுபோலவே, அடுத்த வாரத்தில், திடீரென பட்டு வேட்டி சட்டையில் தலைமைச் செயலகம் வந்தார் விஜய். ஆனால், அதற்கு ஒரு காரணம் இருந்தது.

முதல் முறையாக மே 29ஆம் தேதி முதல்வர் விஜய் கோட் - சூட் போடாமல் பட்டு வேட்டி-சட்டையில் அலுவலகம் வந்திருந்தார். ஆனால், அன்றைய நாளில் மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு அப்படியே தலைமைச் செயலகம் வந்திருந்ததால் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால், வாரத்தில் ஒரு நாள் விஜய் வேட்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகும். அது பெரும்பாலும் வெள்ளிக்கிழமையாக இருந்ததையும் மக்கள் கவனித்திருந்தனர்.

கடந்த 17ஆம் தேதி, சென்னையில் உள்ள சமூக, நீதி விடுதியில் ஆய்வு செய்ய வந்த முதல்வர் விஜய், வேட்டி சட்டையில்தான் இருந்தார். அப்போது மாலை நேரம், மழை பெய்து கொண்டிருந்த நிலையில், குடை பிடித்தபடி விஜய் மாணவர் விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்திய விடியோக்கள் வெளியாகியிருந்தன.

அப்போதுதான் பலரும் இதனை உற்றுக் கவனித்தனர். முதல்வர் விஜய், வெள்ளிக்கிழமையில்தான் வேட்டி - சட்டை அணிகிறார் என்பதே அன்றுதான் அவரது தொண்டர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்றும் வெள்ளிக்கிழமை, (ஜூலை 31), வேட்டி சட்டையில் வந்துள்ளார். அவரை சந்தித்த முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் புத்தம் புது பட்டு வேட்டி சட்டையில் இருக்கிறார் முதல்வர் விஜய்.

இடையே, கரூர் சென்றபோதும், பெரம்பூர் எம்எல்ஏ அலுவலக திறப்பு நிகழ்ச்சியிலும் சாதாரண நீலம், கருப்பு என சட்டைகளில் தோன்றியிருந்தார் முதல்வர் விஜய்.

பின்னணி என்ன?

படிக்கும் உங்களைப்போலவே பலருக்கும் இது பற்றி எதுவும் தெரிந்திருக்காது. பெரும்பாலும் இதற்கு பெரிதாக எந்தக் காரணமும் இல்லை, ஏதோ ஒரு மாற்றத்துக்காக வெள்ளிக்கிழமை தோறும் வேட்டி, சட்டையில் வந்து கொண்டிருக்கலாம் என்று பொதுவான கருத்து நிலவுகிறது.

இல்லை, இல்லை, அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி- சட்டை அணிய வேண்டும் என்று சொல்லியிருக்கலாம் என்றுகூட சிலர் கிசுகிசுக்கிறார்கள். உண்மை என்னவென்று உண்மையாகவே யாருக்கும் தெரியாது, தெரிந்திருக்காது.

முன்னதாக, தான் கருப்பு கோட் சூட் அணிந்ததற்கான காரணத்தை விஜய் தெரிவித்திருந்தார். எளிமை, நேர்மைக்கான அடையாளமாக வெள்ளை சட்டை, கருப்பு கோட் அணிவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை வேட்டி, சட்டை பற்றியும் முதல்வர் விஜய் ஏதேனும் நிகழ்ச்சியில் அவரே விளக்கம் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்.

summary

CM Vijay arrives silk veshti shirt on Fridays What is the reason

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments