முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா உறுதி: மேலும் 198 பேர் பலி

நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 1,05,12,093 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 11:06 am IST
தில்லியில் மேலும் 519 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 1,05,12,093 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 16,946 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த பாதிப்பு 1,05,12,093 ஆக அதிகரித்தது. அதேவேளையில் நாட்டில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement

கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,51,727 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 17,652 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,13,603 ஆக இருக்கிறது.

மேலும், நேற்று 7,43,191 மாதிரிகள் உள்பட இதுவரை 18.42 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments