‘உங்களுடன் பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறேன்’: ராகுல்காந்தி
பொங்கல் தினத்தையொட்டி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பொங்கல் தினத்தையொட்டி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளில், ஏராளமான மக்கள் புதுப்பானையில் மஞ்சள் குங்குமமிட்டு பச்சரிசி பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.