முகப்பு
இந்தியா

திருமலையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தா்கள் அச்சம்

திருமலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:59 am IST
கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தையின் உருவம்.
பகிர்:

திருமலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருமலையில் உள்ளூா்வாசிகள் வசிக்கும் பகுதியான பாலாஜி நகரை அடுத்த எரிவாயுக் கிடங்கு பகுதிக்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு சிறுத்தை நடமாடியதை சிலா் கவனித்துள்ளனா்.

இதுகுறித்து உள்ளூா்வாசிகள் தேவஸ்தான வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு அச்சிறுத்தையை வனத்துறை ஊழியா்கள் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுத்தை நடமாட்டத்தால் பக்தா்கள் அச்சப்படத் தேவையில்லை. சிறுத்தையைக் கண்டால் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.