முகப்பு
இந்தியா

கார்கோனில் 11 மணி நேர ஊரடங்கு உத்தரவு தளர்வு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் விதிக்கப்பட்டிருந்த 11 மணி நேர ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. 

Updated On : 4 மே 2022, 12:14 pm IST
பகிர்:

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் விதிக்கப்பட்டிருந்த 11 மணி நேர ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. 

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி ஊர்வலத்தின் போது மத்தியப் பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து கார்கோன் நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. 

இதற்கு முன்னதாக, ரம்ஜான் மற்றும் அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மக்கள் வீடுகளிலேயே பண்டிகைகளைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவைத் தளர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

பெட்ரோல் பங்குகள் திறக்கப்படும். ஆனால் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்படும் என்று கர்னோனின் துணைபிரிவு நீதிபதி மிலிந்த் தோக் செவ்வாய் இரவு செய்தியாளர்களிடம் கூறினார். 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பயணிகள் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.