முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மியில் இணைந்த ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர்

ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங் மற்றும் அவரது மகள் சித்ரா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

Updated On : 7 ஏப்ரல் 2022, 5:11 pm IST
பகிர்:

ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் சிங் மற்றும் அவரது மகள் சித்ரா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சிக்கு தந்தை-மகள் இருவரையும் வரவேற்றுப் பேசிய கேஜரிவால், ஹரியாணா ஜனநாயக முன்னணியின் அனைத்து தொழிலாளர்களையும் கட்சிக்கு வரவேற்கிறோம் என்றார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள கேஜரிவால்,

Advertisement

Advertisement

சித்ரா ஜி, நிர்மல் ஜி மற்றும் ஹரியாணா ஜனநாயக முன்னணியின் அனைத்து தொழிலாளர்களையும் ஆம் ஆத்மி கட்சி குடும்பத்தில் வரவேற்கிறோம். ஹரியாணா மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

சிங் ஹரியாணா அரசில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 1982, 1991, 1996 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் நாக்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியில் சேரும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆம் ஆத்மி கட்சி ஹரியாணா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

முன்னதாக,  ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக்  தன்வார்  தேசிய தலைநகரில் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments