முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை அவமதித்துள்ளார்
புதுதில்லி: நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே பதவி, ஒர் ஓய்வூதியம் என்ற மோடி அரசின் ஏமாற்றத்திற்குப் பின், தற்போது 'ஆல் ரேங்க், நோ பென்சன்' என்ற கொள்கையை ஏற்றுக்கொள்கிறது.
நமது ராணுவ வீரர்களை அவமதிப்பது நமது தேசத்தை அவமதிக்கும் செயலாகும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு விரைந்து வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மக்களே வளா்ச்சி திட்டங்களின் மையம்: பிரதமா் மோடி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.