FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

6 பிப்ரவரி 2024, 6:15 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீசந்த் டாப் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கராதிகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டர் அஷ்ரஃப் மோல்வி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தெங்பவா கோகர்நாக் பகுதியைச் சேர்ந்த அஷ்ரஃப் மோல்வி 2013 இல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் அமைப்பில் சேர்ந்தான். முன்னதாக வியாழக்கிழமை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments