உணர்வுப்பூர்வமான நீதி அமைப்பு அவசியம்: மோடி வலியுறுத்தல்
திறமையான நாட்டுக்கும் வளர்ச்சியடைந்த சமுதாயத்துக்கும் உணர்வுப்பூர்வமான நீதி அமைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
புது தில்லி: எளிமையான மக்களுக்கும் நீதி சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, திறமையான நாட்டுக்கும் வளர்ச்சியடைந்த சமுதாயத்துக்கும் உணர்வுப்பூர்வமான நீதி அமைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து சட்டத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற காணொலி காட்சி வாயிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா போன்ற வளர்ந்த நாட்டில், ஆரோக்கியமன மற்றும் நம்பிக்கைக் கொண்ட சமூகத்துக்கு, நம்பகமான மற்றும் விரைவான நீதி அமைப்பு கட்டாயம் தேவை என்றும் மோடி கூறினார்.
இதையும் படிக்க.. கேரள நரபலி: வீட்டைச் சுற்றித் தோண்டும் சிறப்புப் படை; அதிர்ச்சி தரும் காரணம்
Advertisement
Advertisement
நீதி அமைப்பு மற்றும் பல்வேறு நடைமுறைகளும், ஒவ்வொரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, கால நேரத்துக்குத் தக்க வகையில் மேம்பாடு அடைய வேண்டும்.
நீதி வழங்கும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை பலப்பட வேண்டும். இது நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மேம்பட மிகவும் அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.