கோப்புப் படம். 
இந்தியா

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி!

மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களை எடுப்பதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்றுப் பெற்றோர்கள் ஐபோன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

DIN


மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களை எடுப்பதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்றுப் பெற்றோர்கள் ஐபோன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பராக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவரது மனைவி சதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.  இந்த தம்பதியினர் தங்களது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், தரமான ரீல்ஸ் விடியோக்கள் வெளியிடுவதற்காக விலை உயர்ந்த ஐபோன் வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் ஐபோன் வாங்குவதற்குப் பணம் இல்லை. இதனால் அவர்கள் தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்று ஐபோன் வாங்க முடிவெடுத்துள்ளனர். 

இதன்படி தங்களது குழந்தையை விற்று புதிய ஐபோனையும் வாங்கியுள்ளனர்.

இதையடுத்து, வீட்டில் குழந்தை இல்லாத நிலையில் ஜெய்தேவ் கோஷ்-சதி தம்பதி, சுமார் ரூ.70,000 மதிப்புள்ள புதிய ஐபோன் 14 வைத்திருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை எங்கே? என கேட்டுள்ளனர். 

இதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். 

இவர்களின் பதிலால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் வந்து விசாரணை செய்தபோதுதான் நடந்த உண்மையைக் குழந்தையின் தாய் சதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து தம்பதிகளிடம் இருந்து குழந்தையை விலைக்கு வாங்கிய நபரிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ள போலீசார், சதியை கைது செய்தனர், ஆனால் ஜெய்தேவ் கோஷ் தப்பி ஓடிவிட்டார், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

ஐபோன் வாங்கத்தான் குழந்தை விற்கப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்பு அவர்கள் தங்கள் 7 வயது மகளை விற்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

SCROLL FOR NEXT