சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது!
நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.28 சதவீகிதம் குறைவாகும்.
பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வை 21.86 லட்சம் மாணவர்கள் எழுதினர். 12 ஆம் வகுப்பைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டது.
Advertisement
Advertisement
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 87.33 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5 சதவீகிதம் குறைவாகும்.
இதையும் படிக்க: மண்பானையே சிறந்தது ஏன்? - ஆனந்த் மஹிந்திரா விளக்கம்!
இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது சிபிஎஸ்இ நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.