முகப்பு
இந்தியா

மதம் குறித்த எந்த விவாதமும் தேவையற்றது: அகிலேஷ் யாதவ் பேச்சு!

மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 நவம்பர் 2023, 5:13 pm IST
பகிர்:

மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: “மதம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை. 

ஆனால் நாம் பேச வேண்டியது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துதான். அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அதைவிடுத்து யாரேனும் மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், அதையெல்லாம் நீங்கள் ஊடகங்களில் காட்டாதீர்கள்.” என்று கூறினார்.

Advertisement

Advertisement

முன்னதாக, அக்கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா கடவுள் குறித்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார். உலகில் உள்ள எல்லோரும் இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் என்று இருக்கும்போது சில கடவுள்களுக்கு மட்டும் எப்படி நான்கு கைகள் இருக்கும் என்று பேசினார்.

மேலும், அறிவியல் நடைமுறைக்கேற்ப தான் அவ்வாறு பேசியதாகவும், கற்பனையில் மட்டுமே நான்கு கைகளுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் கூறினார்.

அவரின் கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மதம் தொடர்பான பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments