தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் கவலைக்கிடம்
இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுதொடா்பாக ஜாகிா் ஹுசைனின் மேலாளா் நிா்மலா பச்சானி கூறுகையில், ‘73 வயதாகும் ஜாகிா் ஹுசைனுக்கு ரத்த அழுத்த பிரச்னைகள் இருந்தன. இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவா் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்’ எனக் கூறியிருந்தார்.
புகழ்பெற்ற தபேலா கலைஞா் அல்லா ரக்காவின் மூத்த மகனான ஜாகிா் ஹுசைன், தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டுச் சென்றாா். இந்த ஆண்டின் கிராமி விருதுகளில் வென்ற மூன்று விருதுகள் உள்பட மொத்தம் 5 கிராமி விருதுகளை ஜாகிா் ஹுசைன் பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இசைத் துறையில் அவரது பணியைப் பாராட்டி 1988-இல் பத்மஸ்ரீ, 2002-இல் பத்ம பூஷண், 2023-இல் பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் இறந்துவிட்டதாக பதிவிட்டு பின்னர் பதிவினை நீக்கியது.
குடும்பத்தினரிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.