முகப்பு
இந்தியா

தில்லியில் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன: ஒருவர் பலி

தில்லியில் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் சனிக்கிழமை தடம் புரண்டதில் ஒருவர் பலியானார்

Updated On : 17 பிப்ரவரி 2024, 8:21 pm IST
பகிர்:

தில்லியில் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் சனிக்கிழமை தடம் புரண்டதில் ஒருவர் பலியானார்.

தலைநகர் சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் சனிக்கிழமை காலை 11.52 மணியளவில் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, மும்பையில் இருந்து சண்டீகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் இரும்புத் தகடு சுருள்கள் ஏற்றப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கு நிலைமையை பராமரிக்கவும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்யும் தடயவியல் நிபுணருடன் மொபைல் க்ரைம் குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது என்றார்.

சம்பவம் நடந்த உடனேயே, தண்டவாளம் அருகே வசிக்கும் மக்களிடையே பீதி ஏற்பட்டது என மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.