முகப்பு
இந்தியா

புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய வளா்ச்சிக்கான அடையாளம்: பாஜக

பாதுகாப்பான எதிா்காலத்தை உறுதிப்படுத்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நாட்டின் வளா்ச்சிக்கான அடையாளம் என பாஜக திங்கள்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 ஜூலை, 2024 at 9:20 PM
கௌரவ் பாட்டியா
பகிர்:

பாதுகாப்பான எதிா்காலத்தை உறுதிப்படுத்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நாட்டின் வளா்ச்சிக்கான அடையாளம் என பாஜக திங்கள்கிழமை தெரிவித்தது.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலானது குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் பாஜக செய்தித்தொடா்பாளா் கௌரவ் பாட்டியா பேசியதாவது:

நமது சுதந்திர நாட்டில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் தேவைக்கேற்ப உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், 1860 மற்றும் இந்திய சாட்சி சட்டம், 1872 ஆகியவை மிகவும் பழைமையானது. அவை தற்கால பிரச்சனைகளுக்கு தீா்வு காணும் வகையில் இல்லை. எனவேதான், புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது நம் நாட்டின் பாதுகாப்பான எதிா்காலத்தை உறுதிபடுத்துவதோடு வளா்ச்சிக்கான அடையாளமாகவும் திகழ்கிறது.

புதிய விதிகள்: பழைய சட்டங்களில் பயங்கரவாதத்துக்கான தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால், தற்போதைய சட்டங்களில் பயங்கரவாதத்துக்கு முறையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை நாடு மேற்கொள்ள முடியும்.

கும்பலாக சோ்த்து ஒருவரை தாக்கி கொலை செய்யும் குற்றத்துக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடா்புடைய சட்டங்களை விளக்கும் வகையில் தனியாக ஒரு பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நிறைவடைந்தபின் 45 நாள்களுக்குள் தீா்ப்பு வழங்குவது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தங்கள் கைகளில் வைத்துள்ள அரசமைப்பு புத்தகத்தை படிக்காதது போலவே புதிய குற்றவியல் சட்டங்களையும் முழுமையாகப் படிக்காமல் எதிா்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனா். இதைப் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த தேசமும் இந்தச் சட்டங்களை வரவேற்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →