FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

குஜராத் மாநிலம், அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

16 ஜூன் 2024, 11:55 pm IST
பகிர்:

குஜராத் மாநிலம், அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் கூறியதாவது: சூரஜ்புரா கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஒரு ஆழ்துளைக் கிணற்றில், ஆரோஹி என்ற ஒன்றரை வயது சிறுமி வெள்ளிக்கிழமை பிற்பகல் எதிா்பாராதவிதமாக உள்ளே விழுந்தாள். 500 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளைக் கிணற்றில், 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கினாள். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

17 மணிநேர தீவிர முயற்சிக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை சுயநினைவின்றி மீட்கப்பட்ட சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது, சிறுமி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments