பிரான்ஸிடமிருந்து மேலும் 26 ரஃபேல் போர் விமானங்கள்: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!
பிரான்ஸிடமிருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
பிரான்ஸிடமிருந்து 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இம்மாதம் 30-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதற்காக பிரன்ஸிலிருந்து, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று விரைவில் தில்லிக்கு வர உள்ளது. இந்த குழுவினர் பாதுகாப்புத்துறை அமைச்சக உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்திய விமானப் படையின் பயன்பாட்டில் ஏற்கெனவே 36 ரஃபேல் போா் விமானங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக ரூ. 50,000 கோடிக்கு, 26 ரஃபேல் கடல் ஜெட் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஐ.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானந்தாங்கி போர்க் கப்பல்களிலிருந்து, புதிதாக வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்களை இயக்க முடியும் என்பது இவற்றின் சிறப்பம்சமாகும்.
இதற்கான டெண்டர் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே விடப்பட்டு அதற்கு இருநாட்டு அரசுகளும் ஒப்புதல் அளித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.