முகப்பு
உலகம்

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து!

அமெரிக்க விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்து பற்றி...

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து - AP
பகிர்:

அமெரிக்க விமான சாகச நிகழ்ச்சியில் இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவின் ஐடஹோவில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப் படைத் தளம் அருகே ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்' விமானக் கண்காட்சியின் இறுதி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அமெரிக்க கடற்படையின் இஏ 18-ஜி ரக இரண்டு போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டபோது, நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களில் இருந்த 4 விமானிகளும் பாராசூட் மூலம் வெளியேறியதால் உயிர்தப்பினர். 4 பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானங்கள் கீழே விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விமான சாகச நிகழ்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, விமானப் படைத் தளம் மூடப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடைசியாக 2018-ல் நடைபெற்ற ‘கன்ஃபைட்டர் ஸ்கைஸ்' விமான சாசக நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் மிதவை விமானத்தின் விமானி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Two Fighter Jets Collide in the US!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.