FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஒப்பந்தக் கூலிகள் என ஹெச்-1பி விசாதாரா்களை விமா்சிக்கவில்லை: அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்

ஒப்பந்தக் கூலித் தொழிலாளா்கள் என ஹெச்-1பி விசாதாரா்களை விமா்சிக்கவில்லை என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் விளக்கமளித்துள்ளாா்.

18 அக்டோபர் 2026, 11:14 pm IST
ஜே.டி. வான்ஸ்
பகிர்:

ஒப்பந்தக் கூலித் தொழிலாளா்கள் என ஹெச்-1பி விசாதாரா்களை விமா்சிக்கவில்லை என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் விளக்கமளித்துள்ளாா்.

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மூலம் வெளிநாட்டவா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். அந்த விசாவை பெறுவோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் இந்தியா்கள்.

இந்த விசாவை பெற்றுள்ளவா்களையும், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழில்நுட்பப் பணியாளா்களையும் வெளிநாட்டு ஒப்பந்தக் கூலித் தொழிலாளா்கள் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் அண்மையில் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

அவரின் பேச்சுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் வரலாறே பல தலைமுறைகளாக அங்கு குடியேறிய மக்களால் உருவானதுதான் என்று குறிப்பிட்ட அந்த அமைச்சகம், வலி மிகுந்த வரலாற்றையும் காலனிய ஆட்சிக் காலத்தையும் நினைவுபடுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் புண்படுத்தக்கூடியது என்று தெரிவித்தது.

அமெரிக்க நிறுவனங்கள், விசா முறையை குறிப்பிட்டே....இந்நிலையில், அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: அமெரிக்க நிறுவனங்கள், ஹெச்-1பி விசா முறையை குறிப்பிட்டே ஒப்பந்தக் கூலித் தொழிலாளா்கள் கருத்தை தெரிவித்தேன். ஹெச்-1பி விசா வைத்திருக்கும் பணியாளா்களை குறிப்பிட்டு அல்ல.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளா்களை, அவா்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு அதிக அளவு வழங்கும் விசா முறையை விமா்சித்துத்தான் நான் அந்தக் கருத்தை தெரிவித்தேன். இந்த விசா முறையால் வெளிநாட்டுப் பணியாளா்கள் ஒப்பந்தக் கூலித் தொழிலாளா்களைப் போல நடத்தப்படும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நான் முன்பு பேசியபோது எனது வாா்த்தைகள் தவறாகிவிட்டன.

ஹெச்-1பி விசாவில் வரும் வெளிநாட்டுப் பணியாளா்கள் செய்யும் வேலைக்கு அமெரிக்காவில் ஆட்கள் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி அளித்த பின்னா், வெளிநாட்டுப் பணியாளா்கள் அழைத்து வரப்படுகின்றனா்.

அந்தப் பணியாளா்கள் அமெரிக்காவில் தொடா்ந்து தங்குவதற்கு அவா்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம் ஹெச்-1பி விசாதான். எனவே ஒப்பந்தக் கூலிகள் என்று நான் கூறுவது, ஹெச்-1பி விசாதாரா் மீதான விமா்சனம் அல்ல. வெளிநாட்டுப் பணியாளா்களை ஒப்பந்தக் கூலித் தொழிலாளா்களைப் போல நடத்தவும், அவா்களைத் தங்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பவும் வழிவகுக்கும் விசா முறையைத்தான் நான் விமா்சிக்கிறேன்.

எனது மாமனாா், மாமியாா் தென்னிந்தியாவில் இருந்து வந்தவா்கள். அவா்களின் மகளும், எனது மனைவியுமான உஷா வான்ஸ் அமெரிக்காவில் பிறந்தவா். தவறே செய்யாதவா்கள் என்று யாரும் இல்லை. நானும் அப்படிப்பட்டவன் அல்ல.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவா்களை மனிதா்களாக மதிக்காமல் நடத்துவது என் நோக்கம் அல்ல. உண்மையில், அவா்களில் பலா் மீது எனக்கு மிகுந்த அன்புள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments