FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மோடிக்கு எதிராக சிஜேபிக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடை! - அமெரிக்க பாடகி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிராக சிஜேபிக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடை வழங்கப்படுவதாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றச்சாட்டு...

13 வினாடிகள் முன்பு
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - அமெரிக்க பாடகி மேரி மில்பென் - கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை சீர்குலைக்க, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் அபிஜீத் தீப்கேவுக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடை வழங்கப்படுவதாக, அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் மாபெரும் இளைஞர் அமைப்பாக உருவெடுத்துள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி), வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பை, பெங்களூர் மற்றும் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் ஆட்சியை சீர்குலைக்கும் முயற்சியாக சிஜேபி மற்றும் அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடை வழங்கப்படுவதாக, அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

இதுபற்றி, இன்று (அக். 14) மேரி மில்பென் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

”இந்தியாவின் தேச பக்தர்களே,

இது அமைதியாக இருக்கும் நேரமல்ல,

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அமையவிருக்கும் உங்களின் எதிர்காலத்துக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளர்களிடம் இருந்து அபிஜீத் தீப்கே மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்கு நிதி வழங்கப்படுகிறது.

25 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சேவை செய்து, 12 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்து வரும் நரேந்திர மோடி என் நாட்டைச் சேர்ந்த (அமெரிக்கா) சீர்குலைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் பணியப்போவதில்லை.

உலகளவில் இதுபோன்ற நன்கொடையாளர்கள் ஒரு குறிப்பிட்ட பாணியைப் பின்பற்றுகிறார்கள். பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட தலைவர்களைக் குறிவைத்து அமெரிக்காவில் பயின்ற ஒருவரைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்பி குழப்பத்தையும், அழிவையும் ஏற்படுத்த முயற்சிப்பது. இதில், நிதி அளிப்பதும் அடங்கும்.

சிஜேபியின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த புதிய குரல் ஒன்றிணைந்து அமைதியான முறையில் போராட வேண்டும். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க மாற்று இயக்கம் எப்போதும் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ஜந்தர் மந்தரில் அத்துமீறி போராட்டம் நடத்த முயன்ற சிஜேபியின் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

American singer Mary Millben has alleged that the CJP and Abhijit Dipke are receiving donations from the US to destabilize PM Modi's administration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments