அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 1,700 இந்தியா்கள்!
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து...

அமெரிக்காவில் இருந்து இந்தாண்டில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்கள் எல்லையிலேயே கைது செய்யப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இதேபோல், முறையான ஆவணங்களின்றி வசிக்கும் நபா்களை கண்டறிந்து அமெரிக்காவில் நாடுகடத்துவதற்கு முன் அவா்கள் குறித்த தகவல்களை முதலில் இந்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனா். அவா்கள் இந்திய குடிமகன்கள் என உறுதிப்படுத்தப்பட்டபிறகே இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
சட்ட விரோத குடியேற்றம் தொடர்பாக நாடு கடத்தல் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்படி, இந்தாண்டில் அமெரிக்காவில் இருந்து 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.