புத்தாண்டு ரீசார்ஜ் திட்டம்! ரூ. 399, ரூ.3999-க்கு என்னென்ன சலுகைகள்!
புத்தாண்டையொட்டி சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது குறித்து...

புத்தாண்டையொட்டி சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரூ. 399க்கு மாதாந்திர திட்டமும் ரூ. 3999-க்கு வருடாந்திர திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பண்டிகைகால ரீசார்ஜ் திட்டத்தைப்போன்று தற்போது புத்தாண்டு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆண்டுக்கு ஒருமுறை என ரூ. 3999 கொடுத்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதில் அளவில்லா (அன்லிமிடெட் கால்ஸ்) அழைப்புகள், நாளொன்றுக்கு 100 இலவச குறுஞ்செய்திகள், 4ஜி மற்றும் 5ஜி அன்லிமிடெட் டேட்டா ஆகியவை 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இதுமட்டுமின்றி மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் + ஹாலிவுட் ஆகியவற்றை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் வேண்டுமென்றால் ரூ. 399-க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இதில் அளவற்ற அழைப்புகள், நாளொன்றுக்கு 100 இலவச குறுஞ்செய்திகள், அளவற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா வழங்கப்படும். இவை 28 நாள்களுக்கு மட்டுமே வேலிடிட்டியாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 28 நாள்களுக்கு மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் + ஹாலிவுட் ஆகியவற்றை இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.