FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அழைப்புகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ்! ரூ. 172-க்கு 28 நாள்கள் பேசலாம்! பிஎஸ்என்எல்

அழைப்புகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது குறித்து...

23 வினாடிகள் முன்பு
பிஎஸ்என்எல் - கோப்புப் படம்
பகிர்:

அழைப்புகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி ரூ. 172-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாள்களுக்கு அளவற்றை அழைப்புகளை பயனர்களால் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இணையம், குறுஞ்செய்தி சலுகைகள் இல்லாமல் அழைப்புகளுக்கு மட்டுமே தனி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறி டிராய் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல்லில் ரூ. 172க்கு அழைப்புகளுக்கான தனி ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 185-க்கு அழைப்புகளுக்கு மட்டுமேயான ரீசார்ஜ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜியோவில் ரூ. 177-க்கு அழைப்புகளுக்கான ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணையப் பயன்பாடு மற்றும் இலவச குறுஞ்செய்தி சேவைகள் தேவைப்படாத பயனர்களுக்காக அழைப்புகளுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் மூலம் 28 நாள்களுக்கு அளவற்ற அழைப்புகளை பயனர்களால் மேற்கொள்ள முடியும்.

summary

A separate recharge just for unlimited calls! Talk for 28 days for Rs. 172 with BSNL

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.