98 நாள்கள் அன்லிமிடெட் கால்ஸ்... ஜியோவில் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
ஜியோவில் ரூ. 999-க்கு ரீசார்ஜ் செய்தால் 98 நாள்களுக்கு அளவில்லா அழைப்புகளைப் பெறும் ரீசார்ஜ் திட்டம் குறித்து...

ஜியோவில் ரூ. 999-க்கு ரீசார்ஜ் செய்தால் 98 நாள்களுக்கு அளவில்லா அழைப்புகளைப் பெறும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
அந்தவகையில் மாதம் ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கும் வகையில் 98 நாள்களுக்கான வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி ரூ. 999-க்கு ரீசார்ஜ் செய்தால் 98 நாள்களுக்கான அளவில்லா அழைப்புகளைப் பெற முடியும். இதுமட்டுமின்றி நாள்தோறும் 2ஜிபி வரையிலான டேட்டாவையும், ஓடிடி தளடத்தை பயன்படுத்திக்கொள்வதற்கான சப்ஸ்கிரிப்ஷனையும் வழங்குகிறது.
இதன்மூலம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தை இலவசமாகப் பார்க்கலாம். முழு வேலிடிட்டி காலத்திற்கும் மொத்தமாக 196ஜிபி டேட்டாவைப் பெற முடியும். தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைந்துவிடும்.