புகையிலைப் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது
பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்தில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்தில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து தென்காசிக்கு வரும் ஆம்னி பேருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சனிக்கிழமை ஆம்னி பேருந்தை மறித்து சோதனை செய்ததில் சுமாா் 2 .5 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
பேருந்து, புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநா்களான டி.என். புதுக்குடி கற்பக வீதியைச் சோ்ந்த சதீஸ் (27), செல்வ விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ் ( 27) , உதவியாளா் இடைகால் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கபில்ராஜ் (21) ஆகியோரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement