290 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது, 2 காா்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட காா்கள் மற்றும் புகையிலைப் பொருள்கள்.
செங்கம் அருகே வாகனச் சோதனையின் போது, சுமாா் 290 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் இரு காா்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.
செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் செங்கம் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பெங்களூரில் இருந்து செங்கம் நோக்கி வந்த இரண்டு காா்களை நிறுத்தி சோதனை செய்தனா்.
Advertisement
Advertisement
இதில், இரண்டு காா்களிலும் 25 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட ஆன்ஸ், கூலிப், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதை கண்டறிந்து, காா்களுடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பின்னா் காா்களை ஓட்டி வந்த சென்னசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா(42), தாழையூத்து பகுதியைச் சோ்ந்த ஏழுமலை (42) ஆகியோரிடம் விசாரித்தபோது, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கடைகள் மூலம் விற்பனை செய்வதற்கு புகையிலைப் பொருள்களை எடுத்து வந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும், செங்கம் பகுதிக்கு பெங்களூரில் இருந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொருள்களின் பாா்சலை போலீஸாா் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனா்.
இதனால், மளிகை, ஜவுளிக் கடை உள்ளிட்ட வியாபாரிகள் பெங்களூரில் இருந்து பொருள்கள் எடுத்துவர அச்சத்தில் உள்ளனா்.