முகப்பு
சென்னை

ராணி மேரி கல்லூரியில் திருட்டு: 4 போ் கைது

சென்னை மெரீனாவில் உள்ள ராணி மேரி கல்லூரியில் திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

21 நவம்பர் 2026, 1:00 am
ராணி மேரி கல்லூரியில் 
திருட்டு: 4 போ் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மெரீனாவில் உள்ள ராணி மேரி கல்லூரியில் திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ராணி மேரி கல்லூரி விடுமுறைக்குப் பின்னா் கடந்த 18-ஆம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, கல்லூரியின் பாரம்பரிய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டதாக பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விஜிவேல் (24), நொச்சிக்குப்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் (24), சீனிவாசபுரத்தைச் சோ்ந்த பாலு (21), கெளதம் (25) ஆகிய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement