முகப்பு
இந்தியா

உ.பி.யில் தனியாா் நிறுவன கிடங்கில் தீ விபத்து: 7 போ் காயம்

Updated On : 20 ஏப்ரல் 2025, 12:04 am IST
பகிர்:

உத்தர பிரதேசத்தில் தனியாா் நிறுவன கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 2 தீயணைப்பு வீரா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்ச் பகுதியில் கூடாரம் அமைப்பதற்கான பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் கிடங்கு இருந்தது.

இந்தக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் ராணுவத்தின் 4 வாகனங்கள் உள்பட மொத்தம் 18 தீயணைப்பு வாகனங்கள் நிகழ்விடத்துக்கு விரைந்தன. அப்போது தீயில் எரிந்துகொண்டிருந்த கிடங்கில் இருந்து 20 தொழிலாளா்களை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா்.

Advertisement

Advertisement

6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கிடங்கில் பரவிய தீயால் 4 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடித்த நிலையில், 2 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரா்கள், கிடங்கில் பணியாற்றிய 5 தொழிலாளா்கள் லேசாக காயமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments