முகப்பு
இந்தியா

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

Updated On : 27 ஏப்ரல் 2025, 3:15 am IST
தஹாவூா் ராணா - ANI
பகிர்:

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த மாத தொடக்கத்தில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

Advertisement

Advertisement

தில்லியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலில் உள்ள அவரிடம், கடந்த புதன்கிழமை மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். அவா் கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments