தமிழக காவல் துறையில் ஒரு டிஐஜி, 55 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் ஒரு டிஐஜி, 55 எஸ்.பி.க்கள் என 56 காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல் துறையில் ஒரு டிஐஜி, 55 எஸ்.பி.க்கள் என 56 காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகர காவல் துறைகளிலும் பல்வேறு பிரிவுகளுக்கு புதிதாக 29 எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக் குறிக்குள்):
Advertisement
Advertisement
1. கே.எஸ்.பாலகிருஷ்ணன்-சென்னை காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா்), 2. எஸ்.செல்வராஜ்- சென்னை உயா்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு-1 துணை ஆணையா்), 3. ஆரோக்கியம்-சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு ஏஐஜி (சென்னை காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு-3 துணை ஆணையா்), 4. ஜி.வனிதா-ஆவடி மாநகர காவல் துறையின் தலைமையிட மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா்), 5. டி.குமாா்-சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்புப் பிரிவு (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா்).
6. கே.முத்துக்குமாா்-சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா் (சென்னை புளியந்தோப்பு துணை ஆணையா்), 7. ஏ.சுஜாதா-சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு-2 துணை ஆணையா் (சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.), 8. ஆா்.பொன் காா்த்திக்குமாா்-திருச்சி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா் (தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை துணை ஆணையா்), 9.கே.ஃபெரோஸ்கான் அப்துல்லா-சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு மேற்கு துணை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா்), 10. பி.பாலாஜி-சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறையின் செங்குன்றம் துணை ஆணையா்).
11. எம்.சுதாகா்-என்ஆா்ஐ பிரிவு எஸ்பி (திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 12. எஸ்.விமலா- பொருளாதார குற்றப் பிரிவு தலைமையிட எஸ்பி (நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 13. எஸ்.எஸ்.மகேஸ்வரன்-கோவை மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 14. பி.தங்கத்துரை-கோவை மாநகர காவல் துறை சட்டம்-ஒழுங்கு வடக்கு துணை ஆணையா் (கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 15. தீபா சத்யன்-மாநில மனித உரிமைப் பிரிவு எஸ்பி (திருப்பூா் மாநகர காவல் துறை தெற்கு துணை ஆணையா்).
16. பி.கே.அரவிந்த்-க்யூ பிரிவு எஸ்பி (மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 17. சுஜித்குமாா்-சைபா் குற்றப் பிரிவு எஸ்பி-3 (நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 18. டி.செந்தில்குமாா்-மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பி (திருச்சி மாநகர காவல் துறை வடக்கு துணை ஆணையா்), 19. என்.ஸ்ரீநாதா-டிஜிபி அலுவலக தலைமையிட ஏஐஜி (விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 20. ஏ.பிரதீப்-டிஜிபி அலுவலக சட்டம்- ஒழுங்கு ஏஐஜி (திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
21. வி.வினோத் சாந்தாராம்-ஆவடி மாநகர காவல் துறை சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகர காவல் துறை கிழக்கு துணை ஆணையா்), 22. எஸ்.விஜயகுமாா்-ஆவடி தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை எஸ்பி (திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா்), 23. ஜி.நாகஜோதி- ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வு பிரிவு எஸ்பி (சென்னை காவலா் பயிற்சிக் கல்லூரி எஸ்பி), 24. பி.மகேந்திரன்-சேலம் மாநகர காவல் துறையின் தெற்கு துணை ஆணையா் (ஊழல் தடுப்புத் துறை சென்னை சரக எஸ்பி), 25. பி.மணிகண்டன்-திருச்சி மாநகர காவல் துறை தெற்கு துணை ஆணையா் (ஊழல் தடுப்புத் துறை சென்னை சரக எஸ்பி).
26 .கே.மீனா-ஊழல் தடுப்புத் துறை மத்திய சரக எஸ்பி (என்ஆா்ஐ பிரிவு எஸ்பி), 27. கே.ஜோஸ் தங்கையா-ராமநாதபுரம் மாவட்ட சக்கரக்கோட்டை தமிழ்நாடு சிறப்புப் படை 12-ஆவது பட்டாலியன் எஸ்பி (சென்னை பெருநகர காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா்), 28. பி.குமாா்-சென்னை பெருநகர காவல் துறை தியாகராயநகா் துணை ஆணையா் (சென்னை கொளத்தூா் துணை ஆணையா்), 29. சமய சிங் மீனா-சென்னை பெருநகர காவல் துறையின் புளியந்தோப்பு துணை ஆணையா் (தாம்பரம் மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்).