மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.
இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு மட்டுமே கடந்த 23-ஆம் தேதி கூடியது.
அக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ராஜீய உறவுகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. 60 ஆண்டுகளாக அமலில் உள்ள சிந்து நதி நீர் ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பது, பாகிஸ்தானுடனான தரை வழி எல்லையான அட்டாரியை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.