முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாராயத்துக்கு 8 பேர் பலி

ராஜஸ்தானில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலியாகியதைப் பற்றி...

Updated On : 30 ஏப்ரல் 2025, 4:46 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்வார் மாவட்டத்திலுள்ள பையின்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாகவும், காவல் துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்.26 ஆம் தேதியன்று கள்ளச்சாராயம் குடித்த பையின்ட்பூரைச் சேர்ந்த சுரேஷ் வால்மிகி (வயது 45) என்பவர் பலியானார். அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்.27 அன்று கிஷன்பூரைச் சேர்ந்த ராம் கிஷோர் (47) மற்றும் ராம் குமார் (35) கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பினால் பலியானார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, ஏப்.28 ஆம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும், உயிரிழப்புகள் ஏற்படத் துவங்கி 3 நாள்கள் கழித்தே மாவட்ட நிர்வாகம் அங்கு வந்ததாகவும், அவர்களது அலட்சியப் போக்கே இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணம் என அக்கிராமவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments