முகப்பு
இந்தியா

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Updated On : 22 பிப்ரவரி 2025, 8:19 pm IST
பிரதமர் மோடி.(கோப்புப்படம்)
பகிர்:

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர் வரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் 43 பேர் வெளியே மீட்கப்பட்டாலும், 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர். சுரங்கப்பாதை 10 மீட்டருக்குமேல் இடிந்து விழுந்துள்ளதாகவும், 200 மீட்டருக்குமேல் சேறு பரவியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

சுரங்கத்தின் மேல்புறம் 3 மீட்டர் தொலைவுக்கு திடீரென இடிந்து விழுந்ததில், உள்ளிருந்தவர்கள் தப்பித்து வெளிவந்தனர். இருப்பினும், சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் துரதிர்ஷ்டவசமாக உள்ளேயே சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்பது குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

அப்போது மீட்புப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார் என்றார். இதனிடையே சுரங்க விபத்தில் எட்டு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments