2019-க்குப் பின் இந்தியாவில் இனக் கலவரம் 94% அதிகரிப்பு! -பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பாஜக அரசு பதவியேற்றதும் வன்முறை 94% அதிகரிப்பு!
புது தில்லி : பாஜக அரசு பதவியேற்றதும் நாட்டில் இனக் கலவரம் 94 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் இன்று(மார்ச் 21) பேசியதாவது:
“2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இனக் கலவர வழக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 94 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.
Advertisement
Advertisement
இனக் கலவரம் எதனால் ஏற்படுகிறது? நீங்கள்(பாஜக தலைவர்கள்) வெறுப்பு கருத்துகளை பேசிகிறீர்கள். உங்களை சார்ந்தோர்(பாஜகவினர்) வெறுப்புணர்வு கருத்துகளை பேசுகிறார்கள்.
ஒட்டுமொத்த தேசமும் மேம்பாடு அடைந்த நிலை என்ற இலக்கை நோக்கி நகரும்போது, நீங்கள் நாட்டில் வெறுப்பைப் பரப்புகிறீர்கள்” என்றார்.
மேலும், மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் ஏற்பட்ட கலவரத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ள அவர், மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமை விமர்சித்துள்ளார்.
“இரட்டை என்ஜின் அரசு என்று சொல்லிக்கொள்ளும் பாஜக தாங்கள் ஆட்சி நடத்தும் மகாராஷ்டிரத்தில் குற்றம் நடப்பின், அதற்கு ஒரு முறையல்ல இருமுறை பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு இருப்பதாகவும்” மாநிலங்களவையில் அவர் விமர்சித்துள்ளார்.
இரட்டை என்ஜின் அரசு ஆட்சிபுரியும் மாநிலங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் தேசிய குற்ற தரவுப் பிரிவின் தரவுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்.
“உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2020-இல் 6,57,925 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021-இல் 6,80,082 வழக்குகளும், 2022-இல் 7,53,675 வழக்குகளும் பதிவாகியுள்ளன. உ.பி.யைப் போலவே, தில்லியிலும், ஜம்மு காஷ்மீரிலும் குற்ற வழக்குகள் அதிகரித்திருப்பதாக் தரவுகள் வெளிக்காட்டுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.