முகப்பு
இந்தியா

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:12 AM
ஃபரூக் அப்துல்லா
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

இந்தியாவுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதால் எதையும் சாதிக்க முடியாது; அது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

இந்திய காலாட்படையின் ஜம்மு-காஷ்மீா் லைட் இன்ஃபன்ட்ரி பிரிவின் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:

மோதல் போக்கில் ஈடுபடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் என்பதை நமது நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். அவா்கள் நீண்டகாலமாக தேவையற்ற மோதல்களைத் தொடா்ந்து வருகிறாா்கள். இதனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை புரிந்துகொண்டு மோதலைக் கைவிட வேண்டும்.

Advertisement

இந்தப் படைப் பிரிவு அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அமைதியும், செழிப்பும் நிலவ வேண்டும் என்றாா்.