முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

மேற்கு வங்கம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களின் பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 4:22 pm IST
ஃபரூக் அப்துல்லா
பகிர்:

மேற்கு வங்கம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களின் பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஹஸ்ரத்பாலில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, கேரளத்தில் காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஸ்டாலினின் கட்சி திமுக வெற்றி பெறும். இது கடவுளின் ஆசீர்வாதம் என்று கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைதி என்பது மிகவும் அவசியமானது. மத்திய கிழக்கில் அமைதி திரும்பாவிட்டால், இந்த உலகிற்கு பெரும் துயரங்கள் ஏற்படும். இஸ்ரேல் தன்னை போரை நோக்கித் தள்ளியது சரியல்ல என்பதை அமெரிக்க அதிபர் உணர்ந்திருப்பார்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தலைவரும் இந்த போர் உடனடியாக முடிவுக்கு வருவதை உறுதி செய்ய முயற்சி செய்ய வேண்டும். இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். மத்திய அரசின் 'போதைப்பொருள் இல்லாத பாரதம்' இயக்கம் குறித்துப் பேசிய அவர், போதைப்பொருளுக்கு எதிரான போரில் வெற்றி பெற மக்களின் ஆதரவு மிக முக்கியம் என்றார்.

summary

National Conference (NC) president Farooq Abdullah claimed on Friday that opposition parties are winning Assembly polls in the three key states of West Bengal, Tamil Nadu and Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.